search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உமேஷ் யாதவ்"

    • கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.
    • குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உமேஷ் யாதவ் விளையாடி வருகிறார். இவருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கடந்த 2013-ம் ஆண்டு மே 29-ம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா வத்வாவுக்கு திருமணம் நடந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இந்த தம்பதியினருக்கு முதலாவதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர்.


    இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று உமேஷ் யாதவ் - தன்யா தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து உமேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


    மகளிர் தின நாளில் உமேஷ் யாதவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3- வது டெஸ்ட் போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய வேகப்பந்து வீச்சாளரின் தந்தை பிப்ரவரி 22 அன்று நாக்பூரில் காலமானார்.
    • பிரதமர் மோடி கடிதம் மூலம் கடந்த மாதம் 27-ந் தேதி இரங்கல் தெரிவித்திருந்தார்.

    உமேஷ் யாதவின் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவர் பிப்ரவரி 22 அன்று தனது 74 வயதில் காலமானார்.

    இதனையடுத்து உமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் கடந்த மாதம் 27-ந் தேதி இரங்கல் தெரிவித்திருந்தார். அதில் தனது மகனை வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக மாற்றியதில் திலக் யாதவின் பங்கைப் பாராட்டினார். உமேஷின் தந்தையின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

    இந்நிலையில் தந்தையில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடிக்குக்கு உமேஷ் யாதவ் நன்றி தெரிவித்தார். அதில், எனது தந்தையின் மறைவுக்கு இரங்கல் செய்தி அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு நன்றி. இந்த கடிதம் எனக்கும் என் குடும்பத்துக்கும் ஆறுதலாக உள்ளது என கூறினார். அந்த பதிவில் பிரதமரின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.


    உமேஷ் யாதவ் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியா சார்பில் விளையாடி வருகிறார். இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் உமேஷ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உமேஷ் யாதவ் இதுவரை இந்தியாவுக்காக 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 ஆம் ஆண்டு டெல்லியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட்டில் அறிமுகமானார். உமேஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • மறைந்த டிகல் யாதவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
    • டிகல் யாதவ் இளமை பருவத்தில் மல்யுத்த வீரராக திகழ்ந்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் தந்தை டிகல் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.

    இளமை பருவத்தில் மல்யுத்த வீரராக திகழ்ந்த டிகல் யாதவ் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் இருந்தார்.

    வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் நேற்று மாலை திடீரென உயிரிழந்தார். இவருடைய திடீர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

    மறைந்த டிகல் யாதவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கமலேஷ், கிரிக்கெட் வீரர் உமேஷ், ரமேஷ் மற்றும் ஒரு மகள். டிகல் யாதவின் இறுதிச்சடங்கு நாக்பூரில் உள்ள கோலார் ஆற்றங்கரையில் நடைபெற்றது. 

    • வங்காளதேச அணியின் மொமினுல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
    • இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

    மிர்பூர்:

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரை வங்காளதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் சட்டோ கிராமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 188 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை மிர்பூரில் தொடங்கியது. காயத்தால் முதல் டெஸ்டில் விளையாடாத இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த டெஸ்டிலும் விளையாடவில்லை. கேப்டன் பொறுப்பை லோகேஷ் ராகுல் ஏற்றார்.

    இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதில் ஜெய்தேவ் உனத்கட் இடம் பெற்றார். வங்காளதேச அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. யாசிர் அலி, எபடோட் ஹொனசர் ஆகியோருக்கு பதில் மொமினுல் ஹக், தஸ்கின் அகமது சேர்க்கப்பட்டனர்.

    டாஸ் ஜெயித்த வங்காளதேச அணி கேப்டன் ஷகீப்-அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். வங்காளதேசத்தின் தொடக்க வீரர்களாக ஜாகீர் ஹசன், நஜ்முல் ஹொசைன் களம் இறங்கினர். முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். இதில் 5-வது பந்தில் நஜ்முல் ஹொசைன் பவுண்டரி அடித்தார்.

    தொடக்க ஜோடி நிதானமாக விளையாடியது. இருவரும் விக்கெட்டை பறிகொடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து பொறுமையாக விளையாடினார்கள். இதனால் வங்காளதேச அணியின் ரன் வேகம் மெதுவாக இருந்தது.

    15-வது ஓவரில் வங்காள தேசத்தின் முதல் விக்கெட் விழுந்தது. ஜெய்தேவ் உனத்கட் பந்தில் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஜாகீர் ஹசன் 15 ரன் எடுத்தார். அடுத்த ஓவரில் 2-வது விக்கெட் விழுந்தது. அஸ்வின் பந்து வீச்சில் நஜ்முல் ஹொசைன் (24 ரன்) எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

    அடுத்து வந்த கேப்டன் ஷகீப்-அல்-ஹசன், 16 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மொமினுல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. முஷ்பிகுர் ரகிம் 26 ரன்கள், லித்தன் தாஸ் 25 ரன்கள், மெகிடி ஹசன் 15 ரன்கள், நூருல் ஹசன் 6 ரன்கள் மற்றும் தஸ்கின் அகமது 1 ரனில் ஆட்டமிழந்தனர். மொமினுல் ஹக் 84 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் வங்காளதேச அணி 227 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினர். ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்துள்ளது.

    • உமேஷ், ஷமி போன்ற வீரர்கள் தங்களை நிரூபித்துள்ளனர்.
    • இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் அணிக்கு அழைக்கப்படுவார்கள்

    மொகாலி:

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20ந் தேதி மொகாலியில் தொடங்குகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் உமேஷ் யாதவ் அணியில் இடம் பெறுவார் என்ற பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இது குறித்து மொகாலியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, உமேஷ் யாதவ் ஒரு தரமான பந்து வீச்சாளர், தனது திறன் குறித்து பல முறை நிரூபித்தவர், இந்த தொடர் அவருக்கு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று கூறினார். உமேஷ், ஷமி போன்ற சக தோழர்கள் மீண்டும் வெற்றிகரமாக செயல்பட ஒரு குறிப்பிட்ட வடிவ கிரிக்கெட்டில் விளையாட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களை நிரூபித்துள்ளனர் என்றும் ரோகித் கூறினார்.

    இதேபோல் இளம் வீரர்களும் தங்களை நிரூபிக்க வேண்டும், அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் அணிக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் ரோகித் சர்மா தெரிவித்தார். விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ரோகித், விராட் கோலி தான் எங்களின் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரர். ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் விளையாடிய விதத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ×